
சென்னை: நவ. 17-
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், சென்னையிலும் ஆபரணத் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் சரிந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருவதற்கு அமெரிக்க டாலரின் வலிமை, அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் மேலும் உயரக்கூடும் என்ற ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன. இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
நேற்றிரவு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,830.74 டாலராக குறைந்தது. கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதிக்கு பிறகு பதிவான மிக குறைந்த விலை இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594.82 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது அதிலிருந்து 31.5 சதவீதம் சரிந்துள்ளது.













