
தஞ்சாவூர்: நவ. 17-
தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற பரிந்துரை செய்யப்படும் என்று, மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் குமார் ஜா
தெரிவித்தார்.
அவரது தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து குழுத் தலைவர் சஞ்சய் குமார் ஜா கூறியதாவது:
ஞ்சாவூர் பெரிய கோவில், இந்தியாவின் ஓர் அதிசயமாகும். வட இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலை மட்டுமே இதுவரை நாங்கள் அதிசயமாகக் கருதி வந்தோம். ஆனால், தஞ்சாவூர் பெரிய கோவில் அதைவிடப் பெரியதாகவும், சிறப்புமிக்கதாகவும் உள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக இடம்பெற்றுள்ள பெரிய கோவிலை, உலக அதிசயப் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்காக நாடாளுமன்றக் குழு நிச்சயம் பரிந்துரை செய்யும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரமாண்டமான கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அற்புதமான பொக்கிஷமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.













