Home செய்திகள் தேசிய செய்திகள் சாமோலியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்

சாமோலியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்

சாமோலி: நவ. 18-
உத்தரகாண்டின் சாமோலி பகுதியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாமோலி பகுதியில் இன்று காலை 10.21 மணியளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 30.380 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.581 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருப்பதாக முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, அதே பகுதியில் காலை 10.52 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.