Home மாவட்டங்கள் சென்னை 9,700 இங்கிலாந்து பவுண்டு கரன்சி பறிமுதல்

9,700 இங்கிலாந்து பவுண்டு கரன்சி பறிமுதல்

பொன்னேரி: நவ. 19-
ஹவாலா பணம், கஞ்சா கடத்​தல் குறித்து எண்​ணூர் போலீ​ஸாருக்கு கிடைத்த ரகசி​யத் தகவலை​யடுத்து எண்​ணூர், அத்திப்பட்டு மேம்​பாலம் சந்​திப்பு வாகனசோதனை சாவடி​யில் போலீ​ஸார்வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.
அப்​போது மீஞ்​சூர் நோக்​கிச் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்​தனர். அப்​போது காரில் இருந்த 5 சூட்​கேஸ்​கள் மற்​றும் 2 தோள் பைகளில் 9,700 இங்​கிலாந்து பவுண்​டுகள், ரூ.6.42 லட்​சம் ரொக்​கம், மருந்​துப் பொருட்​கள், 2.6 கிலோ உயர்​ரக கஞ்சா ஆகியவை இருந்​தது தெரிய​வந்​தது.
இதையடுத்து காரில்பயணம் செய்த சிவகங்கை, இளையான்​குடியை சேர்ந்த ஆஷிக் அலி(29), அபுபக்​கர் சித்திக்(21), உசாமா பதுருர் ரஹ்​மான்(24), திருச்சி- உறையூரை சேர்ந்த முகமது இஸ்மாயில்(19), தஞ்​சாவூரைச் சேர்ந்த ஷேக் அப்​துல்லா(22) ஆகியோரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர்.
அவ்​விசா​ரணை​யில் ஆஷிக் அலி என்பவர்தான் தன் நண்​பர்​களான அபுபக்​கர் சித்​திக், முகமது இஸ்மாயில், உசாமா பதுருர் ரஹ்​மான் ஆகியோர் மூலம் இவற்றை மலேசி​யா​வுக்கு கடத்​திச் செல்ல திட்​ட​மிட்​டு காரில் பெங்​களூரு நோக்​கிச் சென்​றபோது போலீ​ஸாரிடம் சிக்​கி​யுள்​ளனர் என்​பது தெரிய​வந்​துள்​ளது.
இது​குறித்து வழக்​குப் பதிவுசெய்த போலீ​ஸார், ஆஷிக் அலி உள்​ளிட்ட 5 இளைஞர்​களை கைது செய்து, அவர்​களிட​மிருந்த 9,700 இங்​கிலாந்து பவுண்​டுகள், ரூ.6.42 லட்​சம் ரொக்​கம்,2.6 கிலோ உயர்​ரக கஞ்சா, 3 பேரின் பாஸ்​போர்ட்​கள் உள்​ளிட்​ட​வற்றை பறிமுதல் செய்தனர்.