Home மாவட்டங்கள் சென்னை ரூ.96,000-க்கு கீழ் தங்கம் விலை:10 நாட்களில் ரூ.10,000 வீழ்ச்சி

ரூ.96,000-க்கு கீழ் தங்கம் விலை:10 நாட்களில் ரூ.10,000 வீழ்ச்சி

சென்னை: நவ. 19-
சென்னையில் இன்று (நவ.19) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.95,840 ஆகவும் விற்பனை. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.10,000 வரை சரிந்ததுள்ளது.சர்​வ​தேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவ​தாக நில​வும் அதிக எதிர்​பார்ப்பு, வலிமையாகும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்​டாளர்​கள் வாங்​கு​வது ஆகிய காரணங்களால், தங்​கத்​தின் விலை நவ.9-ம் தேதி முதல் குறைந்து வருகிறது.
இதற்​கிடை​யில், 11 மாதங்​களுக்​குப் பிறகு நேற்று முன்​தினம் (நவ.17) ஒரு பவுன் ரூ.1 லட்​சத்​துக்​குக் கீழ் இறங்​கியது. இதன்​ தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் நேற்​றும் இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி​யாக குறைந்​தது. நேற்று பவுன் விலை ரூ.2,040 குறைந்தது.இந்நிலையில், இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1,880 குறைந்து ரூ.95,840 ஆகவும் விற்பனை ஆகிறது.அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.257 குறைந்து ரூ.13,069 ஆகவும், பவுன் விலை ரூ.2,056 குறைந்து ரூ.1,04,522 ஆகவும் விற்பனை ஆகிறது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.180 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.1,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது.