Home செய்திகள் தேசிய செய்திகள் `அக்வான்’ புயலை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்

`அக்வான்’ புயலை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்

புதுடெல்லி: நவ. 20-
‘அக்வான்’ புயலை எதிர்​கொள்​வதற்​காக, தேசிய பேரிடர் மீட்புப் படை 5 மாநிலங்​கள், ஒரு யூனியன் பிரதேசத்​தில் 31 குழுக்​களை தயார் நிலை​யில் நிறுத்​தி​யுள்​ளது.
இந்​தப் புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்​தில் வடக்கு நோக்கி நகர்ந்து வந்​தது. மாநில அதி​காரி​களு​டன் இணைந்து முக்​கிய இடங்​களில் மீட்​புக் குழுக்​களை நிறுத்​தி​யுள்​ள​தாக மீட்​புப் படை தெரிவித்துள்ளது. அவசரத் தேவைக்​காக​ மேலும் 18 குழுக்​கள் இருப்​பில் வைக்​கப்​பட்​டுள்​ளன.
புயல் கரையைக் கடக்​கும் பகுதி ஆந்​தி​ரா​வின் நர்​சாபுரம் முதல் ஒடி​சா​வின் புரி வரை நீளும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் கணித்​துள்​ளது. எனவே, ஒடி​சா​வில் 14 குழுக்​கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆந்​திராவில் 9, தெலங்​கா​னா​வில் 3, தமிழகத்தில் 3 குழுக்​களும் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. சத்​தீஸ்​கரிலும் அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​களி​லும் தலா ஒரு குழு நிறுத்தப்பட்டுள்​ளது.