Home மாவட்டங்கள் சென்னை அனிருத் காவியா திருமண வரவேற்பு: தனித்தனியாக வந்து வாழ்த்திய முதல்வர் விஜய் – சங்கீதா

அனிருத் காவியா திருமண வரவேற்பு: தனித்தனியாக வந்து வாழ்த்திய முதல்வர் விஜய் – சங்கீதா

சென்னை: காவ்யா மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்று வாழ்த்தி இருக்கிறார். விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கோரி இருந்த சூழலில், அவர் முதல்வரான பின் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார். தற்போது காவ்யா – அனிருத் வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக பங்கேற்றுள்ளனர்.சென்னையில் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளம் முதல்வர் விடி சதீஷன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தனியாக பங்கேற்றார். முதல்வருடன் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், உதவியாளர் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் விஜய் வருவதற்கு முன் அவரின் தாயார் ஷோபா சந்திரசேகர் வந்தார். ஆனால் வழக்கமாக முதல்வர் விஜய்யுடன் வரும் நடிகை த்ரிஷா இருப்பார். ஆனால் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா வரவில்லை. இந்த நிலையில் காவ்யா மாறன் – அனிருத் ரவிச்சந்தர் வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்று உள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றப் படி ஏறினார். அப்போது விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் முதல்வராக விஜய் பதவியேற்ற பின் சங்கீதா அந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும் சங்கீதா தொடர்ச்சியாக சென்னையில் வசிக்கவில்லை. அவரின் மகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். இதனையடுத்து சென்னைக்கு அவ்வப்போது வந்த சங்கீதா, காவ்யா மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.