திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை

மதுரை, நவ. 9-
திருச்செந்தூர் கோவிலுக்குள் அர்ச்சகர் உள்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த கோர்ட் தடை வைத்துள்ளது மதுரையில் உள்ள ஹைகோர்ட் கிளை திருச்செந்தூர் கோவில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
திருப்பதி கோவிலில் யாரும் உள்ளே செல்போன் பயன்படுத்தவோ உடைகளை இஷ்டப்படி உடைகளை அணியவோ அனுமதி இல்லை. திருப்பதி கோயில் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது
ஆனால் தமிழக கோவில்களில் மூலவர் முன் செல்பி எடுத்து கொள்கிறார்கள்
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாகரிகமான உடைகளை அணிய வேண்டும். ஜீன்ஸ் .டீ சர்ட் டாப்ஸ் , லெக்கின்ஸ் என உடை அணிந்து வருகிறார்கள்.
இதை ஏற்க முடியாது கோவிலுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணிந்து வர வேண்டும்
.கோவில் என்ன சத்திரமா?கோவில்கள் சுற்றுலா தலம் அல்ல.
எனவே திருச்செந்தூர் கோவிலுக்குள் அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. இது பற்றிய சுற்றறிக்கையை இந்து அறநிலையத்துறை அந்த கோவிலுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.