Home மாவட்டங்கள் சென்னை அடுத்த 100 ஆண்டுகள் த.வெ.க. ஆட்சி: மதுரை ஆதீனம்

அடுத்த 100 ஆண்டுகள் த.வெ.க. ஆட்சி: மதுரை ஆதீனம்

காஞ்சிபுரம்: செப்.18 –
தமிழகத்தில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சிதான் நடைபெறும் என மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நடைபெற்ற வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நேற்று பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
த.வெ.க. சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. திருச்செந்தூருக்குச் சென்ற முதல்வர் விஜய், சுவாமி தரிசனம் செய்துவிட்டு நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டார். இடைத்தேர்தல்களில் த.வெ.க.தான் வெற்றி பெறும்.
வரும் அக். 11ஆம் தேதி, மதுரை தமிழ் சங்கத்தின் சார்பில் முதல்வர் விஜயின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடுகிறேன். ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இறைவனுக்கு முன்பு பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அவர் செயல்படுகிறார். கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்வதைத் தவிர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாலும், வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதாக ஏற்கனவே உறுதியளித்திருந்ததாலும், மதுரை கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை என மதுரை ஆதீனம் தெரிவித்தார்.