Home செய்திகள் தேசிய செய்திகள் அந்நியச் செலாவணியை பாதுகாக்க 1,200 கோடி டாலர் தங்கத்தை விற்றதா ரிசர்வ் வங்கி?

அந்நியச் செலாவணியை பாதுகாக்க 1,200 கோடி டாலர் தங்கத்தை விற்றதா ரிசர்வ் வங்கி?

மும்பை, ஜூன் 3- உலகின் மூன்​றாவது மிகப்​பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்​திய கிழக்​கில் நில​வும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளா​தார நெருக்​கடியைச் சந்​தித்து வருகிறது. எரிபொருள் விலை​யேற்​றம் மற்​றும் உள்​நாட்டு நாணய மதிப்​பின் வீழ்ச்சி ஆகியவை இந்​தி​யா​வின் அந்நியச் செலாவணி இருப்​புக்கு பெரும் சவாலாக மாறி​யுள்​ளன. இந்நிலையில், அந்நியச் செலாவணி வெளி​யேற்​றத்​தைக் குறைத்து, பொருளா​தா​ரத்தை நிலைநிறுத்​து​வதற்​கான நடவடிக்கைகளை மத்​திய அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலை​யேற்​றம் மற்​றும் விலைம​திப் பற்ற உலோகங்​கள் மீதான இறக்​குமதி வரி கணிச​மாக உயர்த்தப்பட்டுள்​ளது. பொது​வெளி​யில் கிடைக்​கப்​பெற்ற புள்​ளி​ விவரங்​களின் அடிப்படை​யில் ‘புளூம்​பெர்க் எகனாமிக்​ஸ்’ அமைப்பு நடத்​திய ஆய்​வில், மே 22-ம் தேதி​யுடன் முடிவடைந்த 2 வாரங்​களில், ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்​புள்ள தங்​கத்தை விற்​பனை செய்திருக்​கலாம் என்று தெரிய​வந்​துள்​ளது. இதன் மூலம், ரிசர்வ் வங்கி தனது அந்​நியச் செலா​வணி சொத்து மதிப்​பில் சுமார் 750 கோடி வரை சேர்த்​திருக்​கலாம் என்று புளூம்​பெர்க் எகனாமிக்ஸ் அமைப்​பின் மூத்த இந்​தி​யப் பொருளா​தார நிபுணர் அபிஷேக் குப்தா கணித்​துள்​ளார். தங்​கத்​தின் மீதான இறக்​குமதி வரி உயர்த்​தப்​பட்ட போதி​லும், ரிசர்வ் வங்​கி​யின் தங்க இருப்பு குறைந்​துள்​ளது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பொது​வாக, வரி உயர்த்​தப்​படும் போது ரிசர்வ் வங்​கி​யின் வசம் உள்ள தங்​கம் மற்​றும் அது சார்ந்த டாலர் சொத்துகளின் மதிப்பு உயர்ந்​திருக்க வேண்​டும். ஆனால், இங்கு இருப்பு குறைந்​துள்​ளது மத்​திய வங்கி தங்​கத்தை விற்​பனை செய்திருக்க வாய்ப்​புள்​ளது என்​ப​தையே காட்​டு​கிறது என அபிஷேக்​ குப்​தா சுட்​டிக்​காட்​டி​யுள்​ளார்​.