
வாஷிங்டன்: செப்டம்பர் 9-
அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளில் கொண்டாட வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுமார் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.
குறிப்பாக கலிபோர்னியா, டெக்சாஸ், நியூஜெர்சி, நியூயார்க், புளோரிடா ஆகிய மாகாணங்களில் இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது, அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடி பிரம்மாண்டமாக விழாவைக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், அமெரிக்காவின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்து அமைப்புகள் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்துக்கள் அனைவருக்கும் முக்கிய அறிவுரைகளை வழங்கி வருகின்றன.
அந்த அமைப்புகள் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும். குடியிருப்புகள், காலனிகள், சாலைகள், தெருக்கள், பொது இடங்களில் விழாவைக் கொண்டாட வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்து அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.















