Home செய்திகள் தேசிய செய்திகள் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி, செப். 3- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு 2 வாரம் அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்​ஸ்ட்​ராங் கடந்த 2024 ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, உயர்நீதிமன்றம் புலன்விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக 2025 அக்டோபரில் திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. இதனால், உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால தடை விதித்தது. திமுக அரசு மேன்முறையீட்டை திரும்ப பெற்றதால், சிபிஐ விசாரணைக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி அமர்வில், 2 வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 23க்கு தள்ளிவைத்தனர்.