Home மாவட்டங்கள் பெங்களூர் கொளத்தூர் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின்தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கொளத்தூர் தவெக வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின்தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: செப். 3:
சென்னை உயர் நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு வெற்றிக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஸ்டாலின், 100 சதவிகித விவிபேட் இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என கோரியிருந்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்ததாக அவர் கூறியிருந்தார். 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை சரிபார்க்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஸ்டாலின் தரப்பில் ஆஜராகி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களுக்குள் விண்ணப்பித்ததாகவும், 45 நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு வழியில்லை என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில், இந்த கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என வாதிடப்பட்டது. இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க. ஸ்டாலினின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.