Home செய்திகள் தேசிய செய்திகள் ராமர் கோவில் அறக்கட்டளை: சிஇஓ பேட்டி

ராமர் கோவில் அறக்கட்டளை: சிஇஓ பேட்டி

அயோத்தி, செப். 3- சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என ராமர் கோவில் அறக்கட்டளை சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை நிர்வாக அதிகாரியாக, நம் விமானப்படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி: இந்தப் பொறுப்பிற்குத் தன்னைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழு, ஸ்ரீ ராம் மந்திர் அறக்கட்டளை மற்றும் ராமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை வேட்பாளர்களிலிருந்து அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்ததை நான் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். விமானப்படையில் 43 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பிறகு, தற்போது பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஸ்ரீ ராமர் எனக்கு வழங்கியிருப்பதை நான் அவரது ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சிறப்பாக பணிகளை செய்ய திறனை இறைவன் எனக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.