Home செய்திகள் உலக செய்திகள் இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி:

இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி:

வாஷிங்டன், ஜூலை 30- உக்​ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்​கொண்டு வரு​கிறார். போர் நடத்த ரஷ்யா​வுக்கு நிதி ஆதா​ர​மாக இருப்​பது அதன் கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வாயு ஆகிய வளங்​கள் ஆகும். எனவே, ரஷ்​யா​விடம் இருந்து பிற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை தடுத்​து​விட்​டால், ரஷ்​யா​வுக்கு போர் நடத்​தத் தேவையான நிதி கிடைக்​காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்​தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளா​தார தடைகளை விதித்ததுடன், ரஷ்​யா​விடம் அதிக அளவில் கச்சா எண்​ணெயை இறக்குமதி செய்​யும் நாடு​களுக்கு அதி​க​மான வரியை விதித்து வருகிறார். அந்த வகை​யில், ரஷ்ய எண்​ணெயை வாங்​கும் இந்​தி​யா, சீனா மீது 100% கூடு​தல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபை​யின் நடை​முறை வாக்​கெடுப்​பில் நடை​முறை​சார் வாக்​கெடுப்பு என்ற முறை​யில் நேற்று முன்​தினம் நிறைவேறியுள்ளது.