Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தி: மொழிகளை இணைக்கும் பாலம் அமித்ஷா

இந்தி: மொழிகளை இணைக்கும் பாலம் அமித்ஷா

மும்பை: செப்.15-
நவி மும்பையில் இன்று நடைபெற்ற ஆறாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாலமாக இந்தி உள்ளது என்றார்.
இந்தி மொழி தின நிகழ்ச்சியாகவும் நடைபெற்ற மாநாட்டில், அலுவல் மொழியான இந்தி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மொழிகளுடனும் தொடர்புடையது என்றார்.
அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தி, இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துகிறது என்றும், நாட்டின் அனைத்து மொழிகளுடனும் தொடர்புடையதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய அளவில் பணியாற்றிய தமது அனுபவத்தையும், தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தையும், மகாராஷ்டிராவின் பன்மொழித் தன்மையையும் அவர் எடுத்துரைத்தார். மொழிகளின் மரியாதை, பயன்பாடு குறித்தும் அவர் பேசினார். மாநாட்டின் நோக்கத்தையும் அவர் விளக்கினார். இதனையும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும் இதை அவர் தெரிவித்தார். குஜராத்தி பேசும் மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவன் நான். இருப்பினும், இந்தி மொழி காரணமாக, தேசிய அளவில் பணியாற்றுவதில் ஒருபோதும் சிரமம் எதிர்கொண்டதில்லை. நாடு முழுவதும் பணியாற்றுவதற்கான மகத்தான வாய்ப்பை இந்த அலுவல் மொழி எனக்கு வழங்கியுள்ளது.