Home செய்திகள் தேசிய செய்திகள் இன்போசிஸ் சிஇஓ நேபாளத்தில் மாயம்

இன்போசிஸ் சிஇஓ நேபாளத்தில் மாயம்

நேபாளம், ஆகஸ்ட் 29-
நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரசுவா, நுவாகோட், தடிங் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த பாதிப்பில் உள்ளன. இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்தின் காரணமாக, இமயமலையில் 2000 அடி அகலமுள்ள பனிப்பாறை உடைந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் கிளை சிஇஓ லேக்ஸ் கோபிசெட்டி மாயமானவர்களில் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இன்போசிஸ் பப்ளிக் சர்வீசஸ், அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சேவையளிக்கும் ஒரு தனி நிறுவனம் ஆகும். அதன் சிஇஓ லேக்ஸ் கோபிசெட்டி, நேபாளத்திற்கு தனது சொந்த காரணங்களுக்காக சென்றிருந்தார். இப்போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாயமான கோபிசெட்டி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, இன்போசிஸ் நிர்வாகம் மீட்பு குழுக்களுடன் பணியாற்றி வருகிறது. கோபிசெட்டி குடும்பத்தாருக்கு தேவையான உதவிகள் செய்து வருவதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், நேபாளத்தில் 320 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாகவும், 400க்கும் மேற்பட்டோர் நேபாள்-திபெத் எல்லையில் தவித்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இந்திய அரசு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.
இதேவேளை, 153 இந்தியர்கள் சீனா எல்லையில் இருந்து பாதுகாப்பாக நேபாளத்திற்கு வந்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் சீனாவில் காணாமல் போன 2400 பேரை கண்டுப்பிடிக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. 517 பேர் வெளிநாட்டவர்கள் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.