
சென்னை: ஆக. 29-
இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தும் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால், தவெக – காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் திமுக கூட்டணி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை நடத்தப்பட்டு, முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடி முதலிடம் பிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தி 2வது இடத்திலும், பிரபல நடிகர் விஜய் 3வது இடத்திலும் உள்ளார். விஜய்க்கு தென்னிந்திய மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களில் அதிக ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தவெக – காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.
முந்தைய ஜனவரி மாத கருத்துக்கணிப்பின் படி, இந்தியா கூட்டணியில் இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மாற்றங்களினால், புதிய கூட்டணியுடன் திமுக களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது, திமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அடுத்த ஆறு மாதங்களில் அரசியல் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












