
புதுடெல்லி: ஆகஸ்ட் 29-
மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயம் நல்ல தரத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதி கரே கூறியதாவது: “மத்திய கிடங்கு கழகம் மூலம் வெங்காயம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய 1.21 லட்சம் டன் கையிருப்பில் 30 சதவீதம் அழுகியதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.
இந்த ஆண்டு முதன்முறையாக மத்திய கிடங்கு கழகத்தின் மூலம் சேமிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெங்காயம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களால் பரிசோதிக்கப்படுகிறது. அறுவடைக்கு பின் மூன்று மாதங்கள் வரை தரம் பாதிக்கப்படாது. பிறகு, வெங்காயம் சுருங்க தொடங்கும். ஜூன்-ஜூலை மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டவை பெரும்பாலான கையிருப்பில் உள்ளன. ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ மூலம் சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் மற்றும் கவுஹாத்தி ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது,” என்றார்.













