
கோவை: ஆக. 29-
கோவை அருகே தொண்டாமுத்தூர் நரசீபுரம் பகுதியில் திமுக பிரமுகர் நாகராஜ் (62) கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் மற்றும் அவரது நண்பர் கந்தசாமி (65) இருவரும் திமுக பிரமுகர்கள். கந்தசாமிக்கு நாகராஜ் மற்றும் தனது மனைவிக்கிடையில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை டீ வாங்க புறப்பட்ட நாகராஜை, நரசீபுரம் தெற்கு ரத வீதியில் கந்தசாமி வழிமறித்து, முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி தாக்கினார். நிலைகுலைந்து விழுந்த நாகராஜை, கந்தசாமி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தி, அவரை சம்பவ இடத்திலேயே கொலை செய்தார்.
தகவலறிந்த போலீசார் கந்தசாமியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். கந்தசாமி தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.












