Home மாவட்டங்கள் சென்னை இளைஞர் புகாரில் நடிகை வர்ஷினி கைது

இளைஞர் புகாரில் நடிகை வர்ஷினி கைது

சென்னை, செப். 23:
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டிருப்பது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறும்படம் தயாரிப்பதாகக் கூறி ஒருவரிடம் ரூ.5 லட்சம் பெற்றதாகவும், பின்னர் அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன்களைப் பறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் வர்ஷினி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் தெரிவித்த தகவலின்படி, வர்ஷினி ஒருவரிடம் குறும்படம் தயாரிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய அந்த நபர், குறும்படத் தயாரிப்புக்காக ரூ.5 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு குறும்படம் தொடர்பான பணிகள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து,
தாம் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு அந்த நபர் கேட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக அந்த நபருக்கும் வர்ஷினிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கிண்டி பகுதியில் அந்த நபரை மிரட்டியதாகவும், அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.