
பெரம்பலூர்: செப். 24-
பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காரில் சென்னை திரும்பியபோது அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் சென்று கொண்டிருந்த கார், வேகமாக பேருந்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.










