Home மாவட்டங்கள் பெங்களூர் எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்

எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர்: ஆக. 24:
எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல என சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற திருமண விழா ஒன்​றில் அவர் பேசி​யது: எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல. தவெக ஆட்சி அமைந்து 105 நாட்​கள் ஆகி​உள்ள நிலை​யில், இந்த அரசால் அதி​கம் பாதிக்​கப்​பட்​டது விவ​சா​யிகள்​தான்.
விவ​சா​யிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க, பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய அரசிடம் நிதி இல்லை என முதல்​வர் கூறும் நிலை​யில், எம்​எல்​ஏக்களுக்கு கார் வாங்​கிக்கொடுக்க எங்​கிருந்து வந்​தது நிதி. எனவே, திமுக எம்​எல்​ஏக்​களுக்கு கார் வேண்​டாம் என்​றும், விவ​சா​யிகளின் பிரச்​சினையைத் தீர்த்து வைக்​கு​மாறும் கூறி​விட்​டோம்.
சட்​டப்​பேர​வை​யில் ஆளுங்​கட்​சி​யினர் என்​னென்ன கூத்​தெல்​லாம் அடித்து வரு​கின்​றனர் என்​பதை மக்​கள் பார்த்து வரு​கின்​றனர். சட்​டப்​பேர​வைக்கு வரு​கிறோமா அல்​லது சூப்​பர் சிங்​கர்நிகழ்ச்​சிக்கு வரு​கிறோமா என்​பது​போல் உள்​ளது. சட்​டசபை​யில் முன்​பெல்​லாம் கேள்விகேட்​டால் பதில் கூறு​வது வழக்​கம். ஆனால், இப்​போது கேள்விகேட்​டால் பதில் கூறாமல் பாடல் பாடு​கின்​றனர்.சட்​டப்​பேர​வை​யில் மக்​கள் பிரச்​சினை, விவ​சா​யிகள் பிரச்​சினை, சட்​டம்- ஒழுங்கு பிரச்​சினை குறித்து பேசி​னால், எந்​தக் கேள்விக்​கும் முதல்​வர் விஜய் பதில் அளிப்​பது கிடை​யாது. 3 அமைச்​சர்​கள் எழுந்து கேட்​கும் கேள்வி​களுக்கு பதில் அளிக்​காமல், பிரச்​சினையை திசை திருப்​பு​கின்​றனர். அமைச்​சர்​கள், ஆளுங்​கட்சி எம்​எல்​ஏக்​கள் எல்​லாம், மக்​கள் பிரச்​சினையைப் பேச வரவில்​லை. அவர்​களுக்கு நான்கு ரீல்​ஸ்​கள் இருந்​தால்​போதும். சர்க்​கார் நடத்​துகிறார்​களா அல்​லது சர்க்​கஸ் கம்​பெனி நடத்​துகிறார்​களா என கேட்​கும் அளவுக்​குத்​தான் தவெக அரசின் செயல்​பாடு​கள் உள்​ளன. தமிழகத்​தின் வளர்ச்​சியை பின்​நோக்கி தள்​ளும் டம்மி அரசாக தவெக அரசு உள்​ளது.
தமிழகத்​தில் நடக்​கும் பிரச்​சினை​கள் குறித்து முதல்​வருக்​குக்கவலை கிடை​யாது. இதை, இப்​போது​தான் மக்​கள் உணரத் தொடங்​கி​யுள்​ளனர். எனவே, இந்த ஆட்​சி​யாளர்​களின் ஆணவத்​துக்​கும், கோமாளித்​தனத்​துக்​கும் மக்​கள் விரை​வில் சரி​யான பாடத்​தைப் புகட்​டு​வர். இவ்​வாறு பேசி​னார்.