Home மாவட்டங்கள் பெங்களூர் கொலை வழக்கில் ரவுடி உள்பட 6 பேர் 24 மணி நேரத்தில் கைது

கொலை வழக்கில் ரவுடி உள்பட 6 பேர் 24 மணி நேரத்தில் கைது

பெங்களூரு: ஆக. 24:
பெங்களூரு மடிவாளா பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி உள்பட 6 பேரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு மடிவாளா அண்டர்பாஸ் அருகே கடந்த 22-ஆம் தேதி இரவு சுஹேல் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களால் சுஹேலை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மடிவாளா போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடிஷீட்டர் ஆதில் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் என மொத்தம் 6 பேரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் பண்டேபாளையா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷப்பீர் என்பவர் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் சுஹேலின் சகோதரர்களுக்கு தொடர்பு இருந்தது. இதனால் ஷப்பீரின் நெருங்கிய நண்பரான ரவுடி ஆதில், சுஹேல் குடும்பத்தின் மீதுஆத்திரத்தில் இருந்துவந்துள்ளான். அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் மங்கம்மனபாளையா பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் சுஹேல் மற்றும் ஆதில் கும்பல் இடையே ஏற்கனவே மோதல் போக் நிலவி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையை செய்துவிட்டு பிடதிக்கு சென்ற கும்பல், அங்கிருந்து லாரி மூலமாக மும்பைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்கள் தப்புவதற்குள் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.