Home மாவட்டங்கள் பெங்களூர் எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் சி.வி.சண்முகம்

சென்னை: மே 8-
அதி​முகவைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்​தார்.
இவர் சமீபத்​தில் நடை​பெற்று முடிந்த தமிழக சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் அதி​முக சார்​பில் மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.
தமிழக சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களை வென்று ஆட்​சி​யமைக்க பெரும்​பான்​மையை நிரூபிக்க இதர கட்​சிகளின் ஆதரவை கோரிய நிலை​யில், அதி​முக​வில் இருந்து ஆதரவு எம்​எல்​ஏக்களு​டன் சி.​வி.சண்​முகம் தவெக​வுக்கு ஆதர​வளிக்​கப்போவதாக பரபரப்பு நில​வியது.
இந்​நிலை​யில், மயிலம் தொகு​தி​யில் வென்​ற​தால் மாநிலங்​களவை உறுப்பினர் பதவியை ராஜி​னாமா செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.இதையடுத்து நேற்று மாலை டெல்லி சென்ற சி.​வி.சண்​முகம், குடியரசுத்​துணைத்​தலை​வரும் மாநிலங்​களவை சபா​நாயகரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து தனது ராஜி​னாமா கடிதத்தை அளித்​தார். இதையடுத்​து, தற்​போது மாநிலங்​களவை இடம் ஒன்று தமிழகத்​தில் காலி​யாகி​யுள்​ளது.