Home செய்திகள் உலக செய்திகள் எலான் மஸ்க்கை நவீன எடிசன் என புகழ்ந்த டிரம்ப்

எலான் மஸ்க்கை நவீன எடிசன் என புகழ்ந்த டிரம்ப்

வாஷிங்டன்,
அக். 9-
ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், நவீன காலத்தின் தாமஸ் ஆல்வா எடிசன் என்றும், அமெரிக்காவின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றும் அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார். வாஷிங்டனில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் சிறந்த அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தேசிய அறிவியல் பதக்கம் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டது.
அதிபர் டிரம்ப் இந்தப் பதக்கத்தை வழங்கி அவரை கவுரவித்தார். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், ஏ.எம்.டி. தலைமைச் செயல் அதிகாரி லிசா சு ஆகியோருக்கும் தேசிய அறிவியல் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதே நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா மற்றும் டெல் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல் ஆகியோருக்கு தேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் டிரம்ப் பேசியதாவது: “எலான் மஸ்க் நவீன காலத்தின் தாமஸ் ஆல்வா எடிசன். தொழில்நுட்ப உலகின் அசுரனான அவர் ஒரு சிறந்த மேதை. விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு உலகையே புரட்டிப் போட்டுள்ளது. அறிவியல் வரலாற்றின் பக்கங்களில் அவரது பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்” என்றார்.