Home மாவட்டங்கள் சென்னை ஐந்து நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு

ஐந்து நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வு

சென்னை, அக். 17-
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு முந்தைய 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2,929 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து, ரூ.15,535-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, ஐந்து நாட்களுக்குப் பிறகு வார இறுதியில் திடீரென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஆபரணப் பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.