Home செய்திகள் தேசிய செய்திகள் ஐந்து நிலநடுக்கங்கள் பதிவு

ஐந்து நிலநடுக்கங்கள் பதிவு

புதுடெல்லி, செப். 11-
இந்தியாவின் லடாக், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு 12:27 மணியளவில் இந்தியாவின் லடாக் மாநிலத்தில் உள்ள லே பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பூமிக்கு அடியில் சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நள்ளிரவில் திடீரென வீடுகள் அதிர்ந்ததால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
லடாக்கைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்திலும் அதிகாலை 1:20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 3.1 ரிக்டர் அளவு லேசான நிலநடுக்கப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டாலும், நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.