Home செய்திகள் தேசிய செய்திகள் கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

வளைகுடா: நவ.11-
பாரசீக வளைகுடாவில், கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற லைபீரியா நாட்டுக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் 6 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 18 பேர் இருந்தனர்.
தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட 4 மாலுமிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு, கூடுதல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான சூழலை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளின் பாதுகாப்பு, மருத்துவச் சிகிச்சை மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாக மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.