Home மாவட்டங்கள் பெங்களூர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி – பெற்றோர் புகார்

கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவி – பெற்றோர் புகார்

தாவணகெரே: செப். 3:
தாவணகெரேயில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹூவின ஹடகலி தாலுகா, குருவத்தி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (17) என்பவரே உயிரிழந்த மாணவி ஆவார். இவர் இங்குள்ள ‘டீம் அகாடமி’யில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி (12-ஆம் வகுப்பு) படித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக இங்கு தங்கிப் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு, விடுதி அறையின் ஜன்னலில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனிடையே, அகாடமி நிர்வாகத்தினர் தனது மகளை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.இது தொடர்பாக டீம் அகாடமி நிர்வாகத்திற்கு எதிராக வித்யாநகர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.