
சென்னை, ஆகஸ்ட் 29-
கைக் குழந்தையுடன் தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவி (38) என்பவர் கோயம்பேடு அருகே கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸார் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட கங்காதேவி என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, 6 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், டெல்லியில் பிரீத்தி என்பவரது வீட்டில் வேலை செய்து வந்த கங்காதேவி, ஒடிசா சென்று கஞ்சா வாங்கி வருமாறு பிரீத்தி கொடுத்த செல்போன் எண்ணின் அடிப்படையில் தொடர்பு கொண்டதாக தெரியவந்தது. கஞ்சாவை வாங்கிய பின்னர், செங்குன்றம் பேருந்து நிலையம் வழியாக கோயம்பேடு வந்த கங்காதேவி, கேரளாவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டார்.
போலீஸார் கங்காதேவியை கைது செய்து, கஞ்சா கொடுத்தவர்கள் மற்றும் கடத்தல் பின்னணியில் இருப்பவர்களை பற்றி விசாரித்து வருகின்றனர்.













