Home மாவட்டங்கள் சென்னை சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பதவிகள் பறிப்பு

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பதவிகள் பறிப்பு

சென்னை, அக். 17-
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகளைப் பறித்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது, பொதுச்செயலாளர் பழனிசாமியின் உத்தரவை மீறி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்து, ஆட்சி தொடர வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 எம்எல்ஏக்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கடிதம் அளித்ததால், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பினர். அதன்பின், மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்றும், தங்களது ஆதரவாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்டச் செயலாளர் பதவியைத் தவிர, அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டன.
ஆனால், அந்தப் பதவிகள் வேண்டாம் என்று சி.வி.சண்முகம் தரப்பினர் கடிதம் அளித்தனர்.