Home மாவட்டங்கள் பெங்களூர் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்

சென்னை: செப். 6-
சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விநாயகர் சிலைகளை தயாரிக்க வைக்கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தென்மோகோல் பொருட்களை தவிர்க்க வேண்டும். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரத்தின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
சிலைகளுக்கு வண்ணம் பூசும்போது செயற்கை சாயங்கள், எண்ணெய் வண்ணங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீர்சார்ந்த, மக்களுக்குக் கேடு செய்யாத இயற்கை சாயங்களையே பயன்படுத்த வேண்டும். பூஜைக்குப் பயன்படும் பூக்கள், இலைகள், பிரசாத விநியோகத்துக்கு மக்கக்கூடிய தட்டுகள், கண்ணாடி கோப்பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே விதிமுறைகளை பின்பற்றி கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக் கூடாது. எனவே, பொதுமக்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.