Home மாவட்டங்கள் பெங்களூர் தசரா விழாவை நிறைவு செய்து காட்டுக்குத் திரும்பிய 13 யானைகள்

தசரா விழாவை நிறைவு செய்து காட்டுக்குத் திரும்பிய 13 யானைகள்

மைசூரு: அக். 22:
உலகப் புகழ்பெற்ற நாடஹப்பா மைசூரு தசரா விழாவை வெற்றிகரமாக நிறைவு செய்த 13 யானைகளும் இன்று காட்டுக்குத் திரும்பின. மைசூரு அரண்மனையில் காலை 12 மணிக்கு நடைபெற்ற வழியனுப்பு விழாவிற்குப் பிறகு யானைப் படை காட்டுக்குத் திரும்பியது.
காட்டிலிருந்து நாட்டிற்கு வந்த யானைகளின் எடையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்பூ சவாரிக்கு பிறகு மைசூரு தன்வந்திரி சாலையில் உள்ள சாயிராம் அண்ட் கோ சார்பில் அனைத்து யானைகளுக்கும் எடை பரிசோதனை செய்யப்பட்டது.
யானைப் படையின் எடை விவரம்:
அபிமன்யு – 5,585 கிலோ, ரூபா – 3,290 கிலோ, மகேந்திரா – 5,620 கிலோ, கோபி – 5,415 கிலோ, சுக்ரீவா – 6,105 கிலோ, ஸ்ரீராமா – 5,150 கிலோ, சைத்திரா – 3,520 கிலோ, ஸ்ரீகண்டா – 6,040 கிலோ, ஏகலவ்யா – 5,915 கிலோ, காவேரி – 3,285 கிலோ, பிரசாந்தா – 5,425 கிலோ, லட்சுமி – 4,010 கிலோ, தனஞ்செயா – 5,570 கிலோ.
தசரா விழா முடிவடைந்ததை அடுத்து யானைப் படை இன்றே காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மூத்த வனத்துறை அதிகாரி பிரபுபௌடா தெரிவித்தார். இது குறித்து உயர் அதிகாரக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக தசரா முடிவடைந்த மறுநாள் யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்படும், ஆனால் இந்த முறை நாளை வெள்ளிக்கிழமை என்பதால் இன்றே காட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாடஹப்பா தசரா விழா வெற்றிகரமாக முடிவடைந்தது, அதிலும் பிரசாந்தா யானை இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அனைத்து யானைகளின் ஆரோக்கியமும் நன்றாக உள்ளது என்று பிரபு தெரிவித்தார்.