Home மாவட்டங்கள் சென்னை தப்பிய 17 கைதிகளில் 13 பேர் சிக்கினர்

தப்பிய 17 கைதிகளில் 13 பேர் சிக்கினர்

தேனி: அக். 28-
தேனி மாவட்ட சிறை​யி​லிருந்து காவலர்​களைத் தாக்​கி​விட்டு தப்​பியோடிய 17 கைதி​களில் 13 பேரை போலீ​ஸார் பிடித்​துள்​ளனர். எஞ்​சிய 4 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது. இச்​சம்​பவம் தொடர்​பாக முதன்மை தலைமை வார்​டன் உட்​பட 9 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.
தேனி மாவட்​டம் ஆண்​டிப்​பட்டி அருகே தேக்​கம்​பட்​டி​யில் மாவட்ட சிறைச்​சாலை அமைந்​துள்​ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரும் இச்​சிறை​யில் 4 பிளாக்​கு​களில் 334 கைதி​கள் அடைக்​கப்​பட்​டிருந்​தனர்.
இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு 10 மணி​யளவில், 3-வது பிளாக்​கில் அடைக்​கப்​பட்​டிருந்த முத்து இளங்​கோவனுக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தாகக் கூறி கைதி​கள் கூச்​சலிட்​டனர். இதையடுத்து அங்கு பாது​காப்​புப் பணி​யில் இருந்த பாரா காவலர் ஸ்டா​லின் பிரபு, பிளாக்​கின் கதவைத் திறந்து உள்ளே சென்​றார்.
முத்து இளங்​கோவனுக்கு ஏற்​கெனவே வலிப்பு நோய் இருந்​ததால், கைதி​கள் கூறியதை காவலர் நம்​பிய​தாகக் கூறப்​படு​கிறது. அவர் உள்ளே சென்​றதும், திட்​ட​மிட்​டிருந்த கைதி​கள் போர்​வையைப் போர்த்தி அவரைச் சர​மாரியாகத் தாக்​கினர். இதில் படுகாயமடைந்த காவலர் நிலைகுலைந்து விழுந்​தார்.
இதையடுத்து 17 கைதி​களும் பிளாக்​கி​லிருந்து வெளியேறி, மேலும் 3 காவலர்​களை​யும் தாக்கிவிட்டு அரு​கி​லிருந்த வனப்​பகுதிக்​குள் தப்பியோடினர். தகவலறிந்த போலீ​ஸார் உடனடி​யாக உஷார்​படுத்​தப்​பட்​டனர்.
25 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டு, சிறையைச் சுற்​றியுள்ள 10 கி.மீ. சுற்​றளவில் தேடுதல் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. கைதி​களின் புகைப்​படங்​கள் மற்​றும் விவரங்​களு​டன் வாக​னங்​கள் சோதனை​யிடப்​பட்​டன. ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​களி​லும் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டது. கைதி​களின் சொந்த ஊர்​கள் மற்​றும் உறவினர்​களின் தொலைபேசி எண்​களும் கண்​காணிக்​கப்​பட்​டன.