
அமெரிக்கா: நவ. 15- அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறையின் தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் புறப்படத் தயாராக இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. எனினும், கோளாறு காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் தாக்கம் இன்றும் தொடர்வதால், விமான நிறுவனங்கள் சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரப் போராடி வருகின்றன. நேற்று சனிக்கிழமை மாலை நிலவரப்படி, அமெரிக்கா முழுவதும் 6,150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 7,300 விமானங்கள் தாமதமாகின. விமான சேவைகள் இன்று மதியத்துக்குள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என வட்டாரங்கள் தெரிவித்தன.
















