Home செய்திகள் தேசிய செய்திகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி:

புதுடெல்லி, ஜூலை 24- நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பட்டது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 5ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக ஓம் பிர்லா அறிவித்தார். எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார். “கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.