Home செய்திகள் தேசிய செய்திகள் நிதாரி வழக்கு: சுரேந்தர் கோலி மர்ம மரணம்

நிதாரி வழக்கு: சுரேந்தர் கோலி மர்ம மரணம்

புதுடெல்லி, செப். 19- உத்தரப் பிரதேசம் நொய்டாவில் 2006-ஆம் ஆண்டு நடந்த நிதாரி தொடர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி (53), உத்தராகண்ட் ஹரித்துவாரில் தேநீர் கடையில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நொய்டா செக்டர் 31 குடிசைப்பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போன நிலையில், அக்டோபர் 2006-ல் பாயல் என்ற இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாயலின் கைபேசி ரிக்‌ஷா ஓட்டுநரிடம் இருந்து கிடைத்தது. அதை செக்டர் 31-ல் உள்ள டி-5 சொகுசு பங்களா பணியாளர் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, பங்களா உரிமையாளர் மணீந்தர் சிங் பாந்தரின் பணியாளரான சுரேந்தர் கோலி கைது செய்யப்பட்டார்.