Home விளையாட்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

ஹராரே, செப். 19- ஆஸ்திரேலியா–ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 112 ரன்களும், கூப்பர் கானொலி 78 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 53 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து, 357 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 48.3 ஓவர்களில் 272 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் சிகந்தர் ராசா அதிகபட்சமாக 45 ரன்களும், பிரண்டன் டெய்லர் 39 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.