Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

சென்னை, செப். 19- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் நிலவும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.145 உயர்ந்து, ரூ.14,155-க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.130 உயர்ந்து, ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.