Home விளையாட்டு ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்தியா சாம்பியன்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் இந்தியா சாம்பியன்

மொகாலி: நவ.6-
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது.
போட்டியின் தொடக்கத்திலேயே ஜப்பான் அணியின் கசுமாசா மாட்சுமோட்டோ 2-வது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதையடுத்து இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்திய அணிக்காக ஷில்லானந்த் லக்ரா 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து தில்பிரீத் சிங் 47-வது நிமிடத்திலும், ஜுக்ராஜ் சிங் 52-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத் 53-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் கோப்பையை கைப்பற்றியது. தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது 6-வது முறையாகும்.