Home விளையாட்டு பாகிஸ்தான் 133 ரன்னில் ஆட்டமிழந்தது

பாகிஸ்தான் 133 ரன்னில் ஆட்டமிழந்தது

பர்மிங்காம், செப். 10- இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 133 ரன்னில் ஆட்டமிழந்தது.
பர்மிங்காமில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 33.5 ஓவர்களில் 133 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் சவுத் ஷகீல் 47 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார்.
முகமது அப்பாஸ் 21 ரன்கள், ரஸதுல்லா 11 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சைம் அயூப் 0, அஸான் அவாய்ஸ் 9, அப்துல்லா ஷபிக் 3, ஷான் மசூத் 5, கேப்டன் பாபர் அஸம் 7, காஸி ஹோரி 4, முகமது இம்ரான் 5 ரன்னில் அவுட்டாகினர். முகமது அலி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அலி ராபின்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்களை பெற்றனர். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 11 ரன்னில், ஜோர்டான் காக்ஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். எமிலியோ கே 6 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.