Home விளையாட்டு வில்வித்தையில் இந்தியாவின் வெற்றி

வில்வித்தையில் இந்தியாவின் வெற்றி

அகமதாபாத், செப். 9- உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவில் தோமன் குமார் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோரை கொண்ட இந்திய அணி 152-139 என்ற கணக்கில் இராக் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. ஆண்கள் ரீகர்வ் பிரிவில், ஹர்விந்தர் சிங் மற்றும் விஜய் சந்தி ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவேக்கியா அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றது. மகளிர் ரீகர்வ் பிரிவில் பாவ்னா மற்றும் பூஜா ஆகியோரை கொண்ட இந்திய அணி, சீனா அணியிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.மகளிர் காம்பவுண்ட் பிரிவில், ஷீதல் தேவி மற்றும் பாயல் நாக் ஆகியோரை கொண்ட இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனா அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றிகள் இந்திய விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன.