
பாரிஸ், ஜூன் 3- பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முன்னேறியுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
ர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), சோரனா சிர்ஸ்டியா (ருமேனியா) ஆகியோரிடையிலான மற்றொரு கால் இறுதிச்சுற்று ஆட்டத்தில் மிர்ரா 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனையும், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான அரினா சபலெங்கா 7-5, 6-3 என்ற கணக்கில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.





















