Home செய்திகள் தேசிய செய்திகள் பிறர் புகையால் பாதிக்கப்பட்டு3.25 லட்சம் பேர் மரணம்

பிறர் புகையால் பாதிக்கப்பட்டு3.25 லட்சம் பேர் மரணம்

புதுடில்லி, செப். 9- புகைப்பிடிப்போரின் சிகரெட் புகையை சுவாசிப்பதால் நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023ல் 3.25 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாக ‘லான்செட்’ சர்வதேச மருத்துவ இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு புகைச்சலின் தீவிர தாக்கங்களை வெளிப்படுத்துகிறது. புகையால் ஏற்படும் புற்றுநோய், இருதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு ஆபத்துக்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.புகையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, புகைத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கும் நிலையை குறிக்கிறது. மக்கள் விழிப்புணர்வு முக்கியம் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இத்தகைய நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் இது மேலும் மோசமடையக்கூடும் என்பதால், புகையால் உண்டாகும் ஆபத்துகளை குறைக்க தக்க நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். புகைச்சல் ஒழிப்புக்கான திட்டங்கள் மற்றும் மக்கள் விழிப்புணர்வை அதிகரிக்க அரசு நடவடிக்கைகள் அவசியமாகின்றன.