
சென்னை, செப். 23:
புதிய மருந்தியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருந்தியல் பட்டப்படிப்புக்காக 10 புதிய மருந்தியல் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்தார். அந்தக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், தமிழ்நாடு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். அதில், புதிய மருந்தியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கட்டாயமாகத் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.











