
சென்னை, அக். 29-
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதாகக் கூறி, ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைதான தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், புழல் மத்திய சிறையின் முதல் வகுப்பு பிரிவில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தூக்கமின்றி தவித்து வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மகேஷுக்கு கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, மின் விசிறி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்றக் காவல் கைதி என்பதால் வழக்கமான உடை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு கைதி என்பதால், அவரது அறையில் கழிப்பறை வசதியும் உள்ளது. எனினும், அறையில் குளிர்சாதன வசதி இல்லாததால் இரவில் தூங்க முடியாமல் சிரமப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
புழல் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், கொசு விரட்டி வழங்கப்பட்டபோதும் தூங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். உடல்நிலையை காரணம் காட்டி, மகேஷுக்கு சிறப்பு உணவு வழங்க அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார்.














