Home செய்திகள் தேசிய செய்திகள் மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி?

மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி?

கொல்கத்தா, ஜூன் 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அதனை உடைத்து தொடர்ந்து 3 முறை முதல்வராக அரியணை ஏறியவர் தான் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது அவரது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60 பேரை முதல் முறை எம்எல்ஏவான ஒருவர் பிரித்து சென்றுள்ளதோடு மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார். அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்து முதல் முறை எம்எல்ஏவான உடன் அடுத்த 4 வாரங்களுக்குள் மம்தா பானர்ஜியையே ஏமாற்றி 60 எம்எல்ஏக்களை தன்வசப்படுத்தியது எப்படி? நம் நாட்டில் அரசியலில் ஆளுமை மிக்க பெண் தலைவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளன. பெண்களும், ஆண்களுக்கு நிகராக ஆளுமை தன்மை கொண்டிருந்தாலும் கூட அரசியலில் சரியான அங்கீகாரம் கிடைப்பது இல்லை. அந்த வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போல் ஆளுமையுடன் கட்சி நடத்தி வந்தவர் தான் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கம் என்றாலே அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டை என்று இருந்த காலத்தை மாற்றியவர் தான் இந்த மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி 2011 முதல் முறையாக மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி, அதன்பிறகு 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து வென்று ஹாட்ரிக் முறையில் முதல்வர் அரியணையில் அமர்ந்தார். இதனால் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத தலைவராக மம்தா பானர்ஜி வலம் வந்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் அவரது கட்சி தோல்வியடைந்தது. அவரது கட்சி மட்டுமில்லை மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார். மேற்குவங்க வரலாற்றில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாபனிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். தற்போது சுவேந்து அதிகாரி தான் பாஜகவின் மேற்கு வங்க முதல்வராக உள்ளார்.