Home விளையாட்டு மும்பை – சிஎஸ்கே இன்று பலப்பரீட்சை: ரோஹித் சர்மா, தோனி களமிறங்க வாய்ப்பு

மும்பை – சிஎஸ்கே இன்று பலப்பரீட்சை: ரோஹித் சர்மா, தோனி களமிறங்க வாய்ப்பு

மும்பை, ஏப்ரல் 23- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்​பை​யில் உள்ள வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணி​கள் பலப்​பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்​டத்​தில் காயத்​தில் இருந்து மீண்​டுள்ள ரோஹித் சர்​மா, எம்​.எஸ்​.தோனி களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக கடந்த 2 ஆட்​டங்​களி​லும் மும்பை அணி​யின் தொடக்க வீர​ரான ரோஹித் சர்மா களமிறங்​க​வில்​லை. தற்​போது காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள அவர் வலைப்​ப​யிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் அவர், களமிறங்க அதிக வாய்ப்​புள்​ளது. கணுக்​காலில் ஏற்​பட்ட காயம் காரண​மாக இந்த சீசனில் இன்​னும் ஒரு போட்​டி​யில் கூட விளை​யா​டாத சிஎஸ்கே அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மான தோனி, வான்​கடே மைதானத்​தில் தீவிரப் பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளார். காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள அவர் ‘இம்​பாக்ட் பிளேய​ராக’ களமிறக்​கப்​படலாம் எனத் தெரி​கிறது.சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 தோல்​வி, 2 வெற்​றிகளு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது. ஹாட்​ரிக் தோல்​வி​யுடன் நடப்பு சீசனை தொடங்​கி​யிருந்த சிஎஸ்கே அணி தற்​போது பார்​முக்கு திரும்பி ஒரு நிலைக்கு வந்​து​விட்​ட​தாகத் தோன்​றிய தருணத்​தில், அதிரடி இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தொடைப்​பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக வில​கி​யுள்​ளார். நடப்பு தொடரில் ஆயுஷ் மாத்ரே 177.88 ஸ்டிரைக் ரேட்​டுடன் 201 ரன்​கள் எடுத்​திருந்​தார். ஆயுஷ் மாத்​ரே​வின் வில​கலால் சிஎஸ்கே அணி மீண்​டும் ஒரு​முறை தங்​களின் பேட்​டிங் வரிசையை பலப்​படுத்த வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. ஆயுஷ் மாத்ரே இடத்​தில் குஜ​ராத் மாநிலத்​தைச் சேர்ந்த விக்​கெட் கீப்​பர் மற்​றும் அதிரடி பேட்​ட​ரான உர்​வில் படேல் களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது. கடைசி​யாக சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. இந்த தோல்விக்​குப் பிறகு சிஎஸ்கே பேட்​டர்​கள் ஒரு குழு​வாக இணைந்து சிறப்​பாகச் செயல்பட வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளனர். ஹைத​ரா​பாத்​துக்கு எதி​ரான போட்​டி​யில் ஒரு கட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் வெற்​றிக்கு 90 பந்​துகளில் 130 ரன்​கள் மட்​டுமே எடுக்க வேண்​டியது இருந்​தது. கைவசம் 8 விக்​கெட்​டு​கள் இருந்​தும் சிஎஸ்கே தோல்​வியைத் தழு​வியது.