Home செய்திகள் தேசிய செய்திகள் மும்பை 20 பள்ளிகளை சீரமைக்கும் ஆலியா-ரன்பீர்

மும்பை 20 பள்ளிகளை சீரமைக்கும் ஆலியா-ரன்பீர்

மும்பை: செப். 19-
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, மும்பையில் உள்ள 20 பள்ளிகளைத் தனது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூருடன் இணைந்து சீரமைக்க இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, மும்பையில் உள்ள 20 பள்ளிகளை ரன்பீர் கபூருடன் சேர்ந்து சீரமைக்க இருப்பதாக ஆலியா பட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“நமது பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த நாளைக் குறிக்கும் வகையிலும், ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்கிற நல்ல காரியத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், பிருஹன்மும்பை மாநகராட்சியின் பரிந்துரைகளின்படி 20 பள்ளிகளைச் சீரமைக்க நானும் ரன்பீரும் உறுதியளிக்கிறோம்.
இதன் மூலம், நமது குழந்தைகள் கற்றுத் தேறுவதற்குப் பிரகாசமான, சிறந்த வசதிகள் கொண்ட இடங்களை உருவாக்க உதவுவோம்” என ஆலியா பட் குறிப்பிட்டுள்ளார்.